Skip to main content

 முகேஷ்சிங் மனு நிராகரிப்பு

Published on 29/01/2020 | Edited on 29/01/2020
m

 

கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து முகேஷ் சிங் மனுவை தள்ளுபடி செய்தது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு.

 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு,  வரும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

 

முகேஷ் சிங்கின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு, இன்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், முகேஷ் சிங்கின் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கினர்.  அப்போது, முகேஷ் சிங் மனுவை நிராகரித்தனர்.

சார்ந்த செய்திகள்