Skip to main content

நியூயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம்...சபரிமலை விவகாரம்

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
sabarimalai


நேற்று மாலை ஐந்து மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனிடையே கேரளாவில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை பல இந்து அமைப்புகள் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

இவ்வாறு நடந்தாலும் சில பெண்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர். வந்தவர்களை எல்லாம் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். பக்தர்கள் இன்றி அங்கு நடப்பதை செய்தி சேகரிப்பு செய்ய வந்த பெண் பத்திரிகையாளர்களையும் தடுத்தனர். ஒரு கட்டத்தில் அங்கு வரும் பெண்களை போராட்டக்காரர்கள் தாக்கத் தொடங்கினர். நேற்று மாலதி என்ற ஐயப்ப பக்தர், போராட்டக்காரர்களின் தாக்குதலால் சாமி தரிசனம் செய்யமுடியாமல் பாதிலேயே திரும்பினார். இதனையடுத்து இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டுவர போலிஸார்கள் தடியடி நடத்தினர். பின்னர், அந்த இடமே வன்முறை களமாக மாறியது.
 

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை நியூயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளர் சுகாசினி ராஜ் என்பவரை பம்பையிலிருந்து அப்பாச்சிமேட்டுக்கு சென்றவரை அனுமதிக்காமல் போராட்டக்காரர்கள் தடுத்திருக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்