2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
10 கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும் ஒறு அதிர்ச்சியாக தென்னாப்பிரிக்காவில் புதியவகை கரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக, கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி வருகின்றது. இந்நிலையில், இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அரசு, "தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதியவகை கரோனா தொற்று குறித்து கண்காணித்து வருகிறோம். இந்தியாவில், இதுவரை யாருக்கும் இந்தவகை தொற்று கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.