Skip to main content

கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதை சிலை; மாற்றம் செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் திறப்பு!

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
New Statue of Angel of Justice in Supreme Court

பிரிட்டீஸ் ஆட்சி காலத்தின் போது, நீதியை சரிசமமாக வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்தில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. அந்த நீதி தேவதை சிலையின், கண்கள் கருப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். பாகுபாடு பார்த்து நீதி வழங்காமல் இருக்கவும், சரிசமமாக எடை போட்டு சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதையும், அநீதியை வீழ்த்த வாள் இடம் பெற வேண்டும் என்பதையும், இந்த நீதி தேவதையின் சிலை வடிவமைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதி தேவதையின் சிலையை மாற்றம் செய்து உச்சநீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில், கண்கள் கட்டப்பட்டிருந்த நீதி தேவதையின், புதிய சிலையில் கண்கள் திறக்கப்பட்டு, வலது கையில் வைக்கப்பட்டிருந்த வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய சிலையானது, தலையில் கிரீடம், நெற்றித் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது. 

இந்த புதிய சிலை சொல்லும் செய்தி குறித்து வெளியான தகவலில், சட்டம் ஒருபோதும் குருடாகாது என்பதையும், அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதையும் வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் நீதி தேவதையின் வலது கையில் இடம்பெற்றிருந்த வாளுக்கு பதிலாக, அரசியலமைப்பு புத்தகம் இடம்பெற்றுள்ளது. 

சார்ந்த செய்திகள்