Published on 26/10/2019 | Edited on 26/10/2019
ஜம்மு- காஷ்மீர், லடாக், மிசோரம், கோவா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கோவா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநில ஆளுநராக பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ணா மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.