குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எரிபொருள் கொண்டு வந்த கப்பல் இலங்கை அருகே நடுக்கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பனாமா நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று, குவைத் நாட்டில் இருந்து இரண்டு மில்லியன் பேரல்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை எடுத்துக்கொண்டு ஒடிசா நோக்கி வந்துகொண்டிருந்தது. ஒடிசாவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்காக கொண்டுவரப்பட்ட இந்த எண்ணெய் கப்பல், இலங்கை அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் வந்தபோது நடுக்கடலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து இலங்கையின் கடலோர காவல் படை கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும், விபத்து நடந்த இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 19 பேர், தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.