Published on 04/08/2020 | Edited on 04/08/2020

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகாவில் மிக, மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.