
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,167 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றிலிருந்து நேற்று (21.06.2021) ஒரே நாளில் 81,839 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 2.89 கோடி பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 6.62 லட்சம் பேர் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை எடுத்துவருகிறார்கள். அதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் சீராக குறைந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 91 நாட்களுக்குப் பிறகு தற்போது குறைவான எண்ணிக்கையில் தினசரி கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.