ஓலா மற்றும் உபர் வாடகை கார் சேவை நிறுவனங்கள், ஆப் மூலம் இயங்கி சில ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு ஒரு வரமாக வந்தன. நாளடைவில் மக்கள் மத்தியில் வரவேற்பும் தேவையும் அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரித்ததாகவும் திடீர் திடீரென்று அதிக கட்டணம் வந்ததாகவும் கூறப்பட்டது. அதுபோல ஓலா நிறுவனத்தில் தங்கள் கார்களை இணைத்துள்ளவர்கள் அந்த நிறுவனம் மீது பல குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். அவர்கள் இணைந்து சங்கம் ஒன்றை உருவாக்கி செயல்படுகிறார்கள்.
இப்படி பல காரணங்களால் சமீப காலமாக இந்த கால் டாக்சி ஆப் நிறுவனங்கள் மீது அதிருப்தி நிலவி வருவதாக பயனாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக ஐ.டி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூருவில் இந்த அதிருப்தி அதிகமாக இருக்கிறது. அதேபோல் சென்னையிலும் இண்டிபண்டண்ட் டிரைவர்கள் மற்றும் ஓலா, உபர் போன்ற அமைப்பு சார்ந்த டிரைவர்களுக்கு இடையேயான பிரச்சனையும் வெகுநாட்களாய் சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது புதிதாக சந்தையில் 'டிரைவ் யு' என்னும் ஆப் நிறுவனம் கால் பதித்து இருக்கிறது. இந்த நிறுவனம் குறைந்த செலவில் டிரைவர்களை அனுப்புகிறதாம். இதனால், கார் வைத்திருப்பவர்கள் மற்ற கால்டாக்சி ஆப்களை தவிர்த்து ட்ரைவ்-யூ வைப் பயனப்டுத்துகிறார்களாம். மேலும் ஜூம் கார் போன்ற கார்களையே வாடகைக்கு கொடுக்கும் நிறுவனங்களின் சேவைக்கும் வரவேற்பு அதிகரிக்கிறது.
பயணங்கள் அதிகமாகி அதற்கான தேவைகள் பெருகிவிட்ட நிலையில் சந்தையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மக்களுக்கு பயனளித்தால் நல்லதுதான்.