Published on 30/06/2021 | Edited on 30/06/2021

மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லி செல்லும் தீனதயாள் ரயில்வே சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த இரண்டு நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்களிடம் முறையான ஆவணங்கள் இன்றி 2.61 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.