நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுர்வேதம், யுனானி ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ம் தேதி நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்விற்கான முடிவு வெளியிடும் தேதிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது தேசிய தேர்வு முகமை தேதியை அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 7ம் தேதி இணையத்தின் வாயிலாக இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன் தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு வருகிற 30ம் தேதி வெளியிடப்படும் எனவும் அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைக்குறிப்பு வெளியான பின் மாணவர்களின் கருத்துக்களுக்கு உரிய அவகாசம் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு வெளியான பின் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆவதால் பொறியியல் கலந்தாய்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.