Published on 28/06/2022 | Edited on 28/06/2022

அறிவிக்கப்பட்ட தேதியில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே தினத்தையொட்டி வேறு சில படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளும் நடக்க இருப்பதால் நீட் தேர்வு நடைபெறும் நாளை மாற்றியமைக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜூலை 15ஆம் தேதி க்யூட் தேர்வும், ஜூலை 21ஆம் தேதி ஜேஇஇ மெயின் தேர்வும் நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.