Published on 17/10/2020 | Edited on 17/10/2020
திருத்தப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு பகுப்பாய்வு பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
பழைய அறிவிப்பில் குளறுப்படி இருந்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து புதிய நீட் தேர்வு பகுப்பாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. திரிபுரா, மேற்குவங்கம், தெலங்கானா, உத்தரகாண்ட் மாநில நீட் தேர்வு பகுப்பாய்வு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் பட்டியலில் தமிழகம் 5- ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 99,610 மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர், தேர்ச்சி விகிதம் 57.4 ஆக உள்ளது.