







Published on 17/07/2022 | Edited on 17/07/2022
எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது.
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு இன்று (17/07/2022) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 05.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதினர். இந்தாண்டு தமிழ் மொழியில் 50,000 பேர் உள்பட தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் சுமார் 20,000 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பெருமைப்பாலான மாணவ, மாணவியர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர்.