வேளாண் மசோதாக்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் விவசாயிகளின் சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் நீர்வள மேம்பாட்டிற்காக ஆறு மிகப்பெரிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். பின்னர் பாஜக அரசின் இந்த நலத்திட்டங்கள் குறித்து பேசுகையில், "சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் நாட்டின் விவசாயிகளை பலப்படுத்தும். ஆனால் சிலர் அதை எப்படி எதிர்க்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.
விவசாயிகள் இதன்மூலம் தங்கள் விளைபொருட்களை யாருக்கும், எந்த இடத்திலும் விற்கலாம். ஆனால் மத்திய அரசு விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கும்போது, குறிப்பிட்ட சிலர் அதை எதிர்க்கின்றனர். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைத் திறந்த சந்தையில் விற்க அவர்கள் விரும்பவில்லை, இடைத்தரகர்கள் லாபம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். விவசாயிகளின் சுதந்திரத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.