
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மத்திய அரசின் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் சில மாணவர்கள் விடுதி தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதியில் தங்கி இருந்த 6ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர் பாலிஸ் போடும் பேஸ்ட்டை கரைத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று மாணவிகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். 3 மாணவிகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் புத்தாண்டையொட்டி மூன்று மாணவிகளும் வீட்டிற்கு செல்ல விடுமுறை கேட்டதாகவும், ஆனால், பள்ளி நிர்வாகம் விடுமுறை தர மறுத்ததால், மாணவிகள் இந்த முடிவை எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.