உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியிருந்த நிலையில், ஆபரேஷன் கங்கா மூலம் அவர்கள் அனைவரும் இந்தியா அழைத்துவரப்பட்டனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் மீட்கப்பட்டது தொடர்பான அறிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியர்களை அண்டை நாடுகள் மிகுந்த மதிப்புடன் நடத்தியதாகவும், கடும் சவால்களுக்கு இடையே 22,500 இந்தியர்கள் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் உயிரிழந்த கார்நாடகாவைச் சேர்ந்த மாணவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.