1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய போர் நினைவிடம் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இந்தியாவிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்தூபி, போர் சம்பவங்களை விளக்கும் காட்சிகள் அடங்கிய கூடம், வருபவர்கள் மாறுவதற்கான பூங்கா பகுதி ஆகியவை இதில் அடங்கும். இதனை பற்றி பேசியுள்ள பிரதமர் மோடி, ''இப்படி ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்து வந்தன. இதற்கு முந்தைய அரசுகள் அதற்கான முயற்சியை பல முறை எடுத்தும், ஏதும் நடக்கவில்லை. அனால் பாஜக அரசு பதிவியேற்ற உடன் கடந்த 2014 ஆம் இதற்கான வேலைகளை ஆரம்பித்தது. அதன் பலனாக தற்போது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இது உருவாகியுள்ளது'' என கூறினார்.