![SPORTS](http://image.nakkheeran.in/cdn/farfuture/KS2SQhrSC2Uv_jSf7Yqr5mgvcefv7xrW7bAw5nDG3hE/1535911066/sites/default/files/inline-images/201809021713413443_Nationallevel-parasprinter-from-Narsinghpur-says-he-has_SECVPF.gif)
மத்திய பிரதேசத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை வாங்கிய விளையாட்டு வீரர் வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்ப்பூரை சேர்ந்தவர் மன்மோகன் சிங் லோதி. மாற்றுத்திறனாளியான இவர் தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தேசிய அளவில் வென்றுள்ளதால் இவருக்கு உதவி தொகையும் அரசு வேலையும் வழங்கப்படும் என மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பின்படி லோதிக்கு இதுவரை எந்த உதவியும் இன்னும் கிடைக்காததால் வறுமை பின்னணியில் உள்ள அவர் கடைசியில் உணவு தேவைக்காக தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
![SPORTS](http://image.nakkheeran.in/cdn/farfuture/FUOt0fy1qwmTr8hwdWl2H7zopoQawzha0esSA0i1LEo/1535911036/sites/default/files/inline-images/201809021713413443_1_mp11._L_styvpf_0.jpg)
இதுபற்றி அவர் கூறும்போது தனக்கு உதவி மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக முதல்வர் உறுதியளித்த பின்னர் இதுவரை அவரை நேரில் கண்டு கோரிக்கை விடுத்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை. குடும்ப நிலை விளையாட்டிலும் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை எனவே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டேன் என பரிதாபமாக கூறியுள்ளார் லோதி.