இந்தியாவில் டாக்ஸி நிறுவனத்தில் முன்னிலை வகிக்கும் ஓலா டாக்ஸி நிறுவனம் 2021-க்குள் சுமார் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா ஓலா மொபிலிட்டி பிரிவில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க பல தரப்பினரும் பல்வேறு முயற்சிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக ஓலா நிறுவனம் மிஷன் எலக்ட்ரிக் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதே போல் ஓலாவின் மொபிலிட்டி பிரிவில் நிதி திரட்டலுக்கென்று தனி பிரிவு செயல்பட்டு வருகிறது.
ஓலாவின் தாய் நிறுவனமான ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ரத்தன் டாடா ஏற்கெனவே முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஓலா நிறுவனத்தின் அவருடைய பங்கு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான எலெக்ட்ரிக் உற்பத்தி பிரிவில் ஓலா நிறுவனம் சிறந்து விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் மொபிலிட்டி பிரிவுக்கு இதுவே சுமார் 400 கோடி நிதி திரட்டியுள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் டைகர் குளோபல் , மேட்ரிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர்.