Skip to main content

“மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நாகரிகமும் வெட்கமும் இல்லை” சோனியா விளாசல்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

 

 

நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ள திறமையற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது. மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ஜனநாயகத்தை சீரழிப்பது குறித்து கொஞ்சமும் வெட்கம் இல்லை. அரசியல் நாகரிகம் இல்லாமல் பதவிக்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் மகாராஸ்டிரா ஆளுநருக்கு உத்தரவிட்டு அவசரமாக அரசு அமைக்க உதவினார்கள் என்று சோனியா குற்றம் சாட்டினார்.

 

sonia gandhi

 

மோடியும் அமித் ஷாவும் பிரித்தாளும் கொள்கைகளை கையாண்டு மக்களீின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் பிரச்சனைகளில் இருந்து மக்களுடைய கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.



 

பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. முதலீடுகள் இல்லை. விவசாயிகளும், வணிகர்களும், மத்தியத்தர வர்த்தகர்களும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அன்றாடம் மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே மோடியும் அமித் ஷாவும் வெவ்வேறு பிரச்சனைகளை கையில் எடுக்கிறார்கள்.



 

முன்னாள் முதல்வர்கள், அதுவும் பாஜக கூட்டணியில் முன்பு இருந்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், சாமானிய மக்கள் என்று, இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கையுள்ள, இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் மாதக்கணக்கில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று சோனியா கூறினார்.

சார்ந்த செய்திகள்