Skip to main content

கிரண் பேடி ஊழல் மறுப்பை அடுத்து நாராயண சாமி கேள்வி...

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
narayana swamy


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு வைத்தார்.

 
”சி.எஸ்.ஆர் திட்டத்தில் துணைநிலை ஆளுநர் ரூபாய் 85 லட்சம் வசூல் செய்ததாகவும் ஆனால் அப்படி வசூல் செய்த தொகையை சி.எஸ்.ஆர் கமிட்டிக்கு அவர் அனுப்பவில்லை என்றும், ஆளுநர் மாளிகையை காட்டி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார் கிரண்பேடி” என்று அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்தார் நாராயணசாமி. 

 
இதனையடுத்து,” சமூக பொறுப்புணர்வு நிதி அளிக்க முன்வருபவர்களுக்கு உதவிதான் செய்கிறோம். நேரடியாக கொடையாளர்களை ஒப்பந்தக்காரர்களிடம் இணைத்து பணிகள் நடத்தப்பட்டன” என்று கிரண் பேடி மறுப்புத் தெரிவித்தார்.
 

இந்நிலையில், பொது சேவைக்காக மக்களிடம் ஆளுநர் அலுவலகம் வசூலித்தது எவ்வளவு? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சமூக பொறுப்புணர்வு நிதி தொடர்பாக துணை நிலை ஆளுநர் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும், சமூக நிதி வழங்குவது தொடர்பாக வரையறைகள் உள்ளன என்றும் இது தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்