Skip to main content

தனியாக நடைப்பயிற்சி சென்றதற்காக மனைவிக்கு ‘தலாக்’ கொடுத்த இஸ்லாமியக் கணவர்!

Published on 13/12/2024 | Edited on 13/12/2024
A Muslim husband gave divorce to his wife for walking alone in thane

திருமண உறவை முறித்துக்கொள்வதற்காக கணவன், மனைவியிடம் மூன்று முறை ‘தலாக்’ எனும் வார்த்தையைச் சொல்லும் ‘முத்தலாக்’ நடைமுறை இஸ்லாம் மதத்தில் இருந்தது. இந்த நடைமுறை சட்டவிரோதமானது என்று அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் தெரிவித்து மத்திய அரசு  கடந்த 2019ஆம் ஆண்டு முத்தலாக் நடைமுறையை தடை செய்தது. இந்த நிலையில், மனைவிக்கு மூன்று முறை ‘தலாக்’ கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் 31 வயது நபர். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவருக்கு, 25 வயதில் மனைவி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், இந்த பெண் தனியாக நடைப்பயிற்சி சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவருடைய கணவர், தனது மாமனாருக்கு போன் செய்து, ‘முத்தலாக்’ மூலம் தனது திருமணத்தை ரத்து செய்வதாகக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, போலீசாரிடம் மனைவி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அந்த நபர் மீது கிரமினல் மிரட்டல் மற்றும் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, பாரதிய நியாய சன்ஹிதா கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்