Skip to main content

முலாயம் சிங் யாதவ் காலமானார்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Mulayam Singh Yadav passed away!

 

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82) உடல் நலக்குறைவால் ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10/10/2022) காலமானார். 

 

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


முலாயம் சிங் யாதவ் குறித்த விரிவான தகவல்

கடந்த 1992- ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியைத் தொடங்கியவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேச அரசியலில் பிரதான கட்சிகளில் ஒன்றாக உள்ளது. இவர் 1989- ஆம் ஆண்டு முதல் 1991- ஆம் ஆண்டு வரையும், 1993- ஆம் ஆண்டு முதல் 1995- ஆம் ஆண்டு வரையும், 2003- ஆம் ஆண்டு முதல் 2007- ஆம் ஆண்டு வரையும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக மூன்று முறைப் பதவி வகித்துள்ளார். முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முலாயம் சிங் யாதவ் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்