ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 15% வீழ்ச்சியடைந்ததால் நேற்று ஒரேநாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் சுமார் 52,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை முடங்கியுள்ள சூழலில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மட்டும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்தது. இதன் பலனாக முகேஷ் அம்பானி இந்த ஊரடங்கு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக மாறினார். இந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 15% வீழ்ச்சியடைந்ததால் நேற்று ஒரேநாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் சுமார் 52,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
தொற்றுநோய் பாதிப்பால் உலகம் முழுவதும் எண்ணெய் தேவை குறைந்ததையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் நிகர லாபம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ. 9,567 கோடி மட்டுமே கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ .11,262 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.