ஹெல்மட் அணிவதில் இருந்து பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகை வாபஸ் வாங்கப்படும் என்று மத்தியபிரதேச அரசு தெரிவித்துள்ளது. வாகன விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கும் நோக்கில் அம்மாநில அரசு புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கினாலே இரண்டு ஹெட்மெட் வாங்கியதற்கான ஆதாரத்தை காட்டினால்தான் அந்த வண்டிக்கு பதிவு எண் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஹெட்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மோட்டார் வாகனச் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாக இருக்கும் போது இவர்களுக்கு மட்டும் எப்படி விலக்கு தர முடியும், விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது தானே? என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட அம்மாநில அரசு வழக்கறிஞர் விரைவில் இந்த சலுகை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.