மேற்கு வங்கம் மாநிலத்தின் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அபிர்தா சாட்டர்ஜி தொடர்புடைய மீண்டும் 21 கோடி ரூபாய் பணம், கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் பார்த்தா சாட்டார்ஜி அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி உள்ளிட்டோரை கைது செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அர்பிதா முகர்ஜி வீட்டில், கடந்த ஜூலை 23- ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட சோதனையில் 21 கோடி ரூபாய் ரொக்கமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று (27/07/2022) மீண்டும் சோதனை செய்ததில், 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊழல் புகாரில் கைதாகியுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டார்ஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனிடம் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்தி அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.