Skip to main content

மீம் ஆகும் புகைப்படம்... கருத்து தெரிவித்த பிரதமர் மோடி...

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

பிரதமர் மோடி சூரிய கிரகணத்தை காணும் புகைப்படத்தை வைத்து பல மீம்கள் உருவாகின்றன என ஒருவர் தெரிவித்த நிலையில், அதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

 

modi's photo of seeing solar eclipse become memes

 

 

வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றியுள்ளது. தென் தமிழகம், கொச்சின், அஹமதாபாத், புவனேஸ்வர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் தன்னால் நேரடியாக சூரிய கிரகணத்தை பார்க்கமுடியவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "பல இந்தியர்களைப் போலவே, நானும் சூரிய கிரகணத்திற்காக ஆர்வமாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை, ஆனால் கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் நடந்த கிரகணத்தின் காட்சிகளை பார்த்தேன். இது தொடர்பான வல்லுனர்களுடன் பேசியதன் மூலம் இந்த விஷயத்தில் எனது அறிவு வளப்பட்டிருக்கிறது" என தெரிவித்தார். இந்நிலையில் அவர் கிரகணத்தை பார்க்க முயற்சிக்கும் புகைப்படத்தை வைத்து மீம்கள் உருவாகின்றன என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, "மிகவும் வரவேற்கிறோம் .... மகிழ்ந்திருங்கள்"  என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்