மோடியின் சொந்தத் தொகுதியில் மயக்க மருந்துக்குப் பதிலா விஷவாயு!
மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக விஷவாயு செலுத்தப்பட்டதால் 14 பேர் உயிரிழந்தனர்.
யோகி ஆளும் உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழத்தை ஒட்டி சுந்தர்லால் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த ஜூன் 6 முதல் 8ம் தேதி வரை விஷவாயு செலுத்தப்பட்டதால் 14 பேர் இறந்துவிட்டனர். நோயாளிகளுக்கு மயக்க அனஸ்தீஷியாவுக்கு பதிலாக நைட்ரஸ் ஆக்ஸைடு என்ற வாயு செலுத்தப்பட்டதால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அலகாபாத்தை சேர்ந்த அஹமது என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளதை அடுத்து இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. இந்த இறப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நைட்ரஸ் ஆக்ஸைடு சிரிப்பு வாயு என்றும் அழைக்கப்படுகிறது. அதிகளவில் இந்த வாயுவை பயன்படுத்தும்போது விஷத்தன்மை உள்ளதாக மாறி மூளையை பாதித்துவிடும். மேலும் நோயாளிகளுக்கு மயக்க மருந்தாக பயன்படுத்தினால் இறப்பு நிச்சயம்.
இந்த நச்சு வாயுவை அலகாபாத் வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ ஹர்ஷவர்த்தனின் தந்தை அசோக் குமார் பாஜ்பாய் என்பவர் நடத்தும் நிறுவனம் விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.