மோடி அரசு ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் செய்துள்ளது என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில்,
முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹலான்டே பிரான்ஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்து பேசியபோது, ரிலையன்ஸ் விவகாரத்தில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது. ஒப்பந்தத்திற்கு ரிலைன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசுதான், அம்பானி குரூப்புடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை நடத்தியது எனக்கூறியுள்ளார்.
மேலும் ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டசால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்திகள் வெளியானததை தொடர்ந்து பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி இன்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு வேண்டியவர்களுக்கு சாதமாக பிரதமர் மோடி நேரடியாக தலையிட்ட ரகசியத்தை வெளியிட்டதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.