Published on 23/09/2020 | Edited on 23/09/2020

பிரதமர் நரேந்திர மோடி 2015 முதல் 58 நாடுகளுக்கு பயணித்துள்ளதாகவும், அதற்காக மொத்தம் 517 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிலில், "பிரதமர் நரேந்திர மோடி 2015 முதல் 58 நாடுகளுக்கு பயணித்துள்ளார். அதற்காக மொத்தம் 517 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் அதிகபட்சமாக ஐந்துமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இவையல்லாமல், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் பயணித்துள்ளார். இந்த பயணங்களுக்கான மொத்த செலவு 517.82 கோடி ரூபாய்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.