மேற்கு வங்காள மாநிலம் தாக்குர்நகர் பகுதியில் சிறுபான்மையினத்தவர்களான தலித் மட்டுவா சமூகத்தினர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.
அப்போது அவர்,
மேற்கு வங்காளத்தின் சமூக வரலாற்றில் இந்த தாக்குர்நகர் பகுதிக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. என்னை காண்பதற்காகவும், எனது பேச்சை கேட்டு கருத்துகளை ஆதரித்து, ஆசி வழங்குவதற்காகவும் பெருந்திரளாக இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை எல்லாம் பார்க்கும்போது இந்த மாநிலம் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பதை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் எங்கள்மீது செலுத்தும் இந்த அன்பைப் பார்த்து கலக்கமடைந்துள்ளார் மம்தா பானர்ஜி. பா.ஜ.க.வினருக்கு எதிரான வன்முறை தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறார்.
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புக்குரிய பட்ஜெட். இதன் மூலம் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் உழைப்பாளிகளும் பயன் பெறுவார்கள் என்றார்.