Published on 16/10/2020 | Edited on 16/10/2020

100 ரூபாய் நாணயத்தைத் தொடர்ந்து 75 ரூபாய் நாணயத்தை இன்று வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.
ஜனசங்கத் தலைவர்களில் முக்கியமானவரும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான விஜயராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கட்கிழமை வெளியிட்டார். 1919-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி பிறந்த விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், விஜயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி. இந்நிலையில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75 -ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். மேலும், அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.