Skip to main content

மோடி கண்காணிக்க, நிர்மலா சீதாராமன் ப்ளூ பிரிண்ட் கொடுக்க... சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2 முன்னேற்பாடுகள்...

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

dfddsfdsf

 

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.

இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே கூறுகையில், "தீவிரவாத முகாம்கள் இருக்கும் இடத்தை பற்றிய தகவல்களை ஏற்கனவே பாகிஸ்தான் அரசிடம் கூறினோம், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்தியாவே அவர்களை தாக்கி அழிக்க வேண்டியது ஆயிற்று. இந்த தாக்குதலில் அவர்களது மிக பெரிய பயிற்சி தளம் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை" என தெரிவித்தார்.

இன்று அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதல் பிரதமர் மோடியின் கண்காணிப்பில் நடந்ததாகவும், மேலும் இந்த திட்டத்திற்கான ப்ளூ பிரிண்ட் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் 3 முக்கிய அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது எனவும் ரிப்பப்லிக் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்