கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதார ரீதியில் முன்னேறியுள்ள அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளைச் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மே 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.