Published on 05/04/2019 | Edited on 05/04/2019
கர்நாடக முதல்வர் குமாரசாமி இரு தினங்களுக்கு முன் தேர்தல் வேலைகளுக்காக ஹசன் தொகுதிக்கு செல்லும் போது அவரின் வாகன அணிவகுப்பு தேர்தலை ஆணையத்தின் சோதனை படையினரால் தடுத்து நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
முதல்வரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தது சாதாரண ஒரு விஷயம் தான் என தேர்தல் ஆணைய அதிகாரி தர்ஷன் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து தற்போது கருத்து கூறியுள்ள கர்நாட முதல்வர் குமாரசாமி, "தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை ஆகியவை என்னையும், என் குடும்பத்தினரை வேண்டுமென்றே தொந்தரவு செய்கின்றன. தேர்தல் ஆணையம் அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றட்டும், ஆனால் சந்தேகத்தின் பேரில் எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்" என கூறியுள்ளார்.