லாக்டவுன் குறித்து பெருவாரியான மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனப் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,553 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ள நிலையில், 18,000க்கும் மேற்பட்டோருக்குச் சோதனை செய்யப்பட்டதில் 415 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "பலர் இன்னும் லாக்டவுனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தயவுசெய்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மேலும், மத்திய அரசின் வழிமுறைகளையும், விதிகளையும் தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.