மும்பை கோல்ஹப்பூரில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
மராட்டியம் மாநிலம் கோல்ஹப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தோலி மற்றும் கோயானா பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான சேதங்கள் எதும் ஏற்படவில்லை என்றே முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.