Published on 26/12/2022 | Edited on 26/12/2022

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மதியம் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 68 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு எதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.
அவர் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.