பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 104 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதார துறை அமைச்சர், செயலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
அப்போது நடந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஆட்டத்தை பார்த்து கொண்டு வந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, இந்தியா பந்துவீசும் போது குழந்தைகள் இறப்பு குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது.
இதனையடுத்து அந்த கூட்டத்தில் மற்றவர்கள் பேசுவதை சிறிது நேரம் கவனித்துக்கொண்டிருந்த அவர், சிறிது நேரத்தில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்டுள்ளார். அதற்கு அவரது உதவியாளரும் ஸ்கோர் பார்த்து இந்தியா 4 விக்கெட்கள் எடுத்துள்ளது என கூறியுள்ளார்.
பீகார் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துகொண்டு, குழந்தைகள் உயிர் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான கூட்டத்தில் அமர்ந்து கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட அமைச்சரின் இந்த செயல் பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.