நல உதவிப் பொருட்களை கையில் கொடுக்காமல் மேடையிலிருந்தே அமைச்சர் ஆர்.வி தேஷ்பாண்டே தூக்கி வீசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகா, ஹலியல் நகரில் புதிதாக அரசு சார்பில் விளையாட்டு மைதானம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மைதானத்தை வருவாய்துறை அமைச்சரான தேஷ்பாண்டே நேற்று தொடங்கி வைத்தார். மேலும், இந்த நகரத்தில் சாதணை புரிந்த வீரர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் தேஷ்பாண்டே, வீரர்களை மேடைக்கு அழைத்து விளையாட்டு உபகரங்களை தராமல், மேடையிலிருந்தபடியே கீழே உள்ள வீரர்களுக்கு தூக்கி வீசியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி, கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வேறு நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்ல இருந்ததால் இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.