Published on 18/08/2018 | Edited on 18/08/2018
![ARMY](http://image.nakkheeran.in/cdn/farfuture/c9u3Af6-Gi-cUNLJMRHQacZXMymCjwS42bO6QCvp_3Y/1534604646/sites/default/files/inline-images/Dk3gQvzW4AESuh9.jpg)
கடந்த ஒரு மாத கனமழையால் கேரளாவே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல் நிலச்சரிவாலும் பதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து, மீட்பு விடுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் கேரளாவில் ஏற்பட்டிற்கும் பாதிப்புகளுக்கு நிவாரண பொருட்கள், நிதிகள் தருகின்றனர்.
இந்நிலையில், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் ராணுவ விமானம் திருவனந்தபுரம் வந்தடைந்துள்ளது. பதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.