Published on 28/12/2019 | Edited on 28/12/2019
இந்திய விமானப்படையில் பல்வேறு போர் விமானங்கள் செயல்பாட்டில் இருந்து வந்தாலும், மிக் ரக போர் விமானங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1999ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவுக்கு மிக உறுதுணையாக மிக் ரக போர் விமானங்கள் இருந்தன. குறிப்பாக மிக் 27 ரக விமானங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய விமான படையில் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது அதைவிட அதிநவீன உபகரணங்களோடு புதிய விமானங்கள் இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பழைய விமானங்கள் பயன்பாட்டில் இருக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ராஜஸ்தானில் மிக் 27 ரக விமானங்கள் ஓய்வு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விமானங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அதன் பணியை அதிகாரிகள் நிறைவு செய்தனர்.