Skip to main content

கேரள மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் மாதவிடாய் நாள் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
கேரள மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் மாதவிடாய் நாள் விடுமுறை அறிவிப்பு!

கேரளாவிலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களுக்கும், மாதவிடாய் நாட்களில் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கான கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் சுமார் 1,200 தனியார் சுயநிதி பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், பெண் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் தான் பெரும்பாலும் பணிபுரிகின்றனர்.

அவர்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அந்த ஒருநாள் முதல்நாளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மாதவிடாய் நாட்களில் பெண்கள் படும் கஷ்டம் புரிந்ததால் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்கும் வழக்கம் இந்தோனிசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

மும்பையில் உள்ள கல்ச்சர் மிஷின் நிறுவனம் தான் இந்தியாவிலேயே முதன்முதலில் இதனை நடைமுறைப்படுத்தியது. அதன்பின்னர் கேரளாவின் மாத்ருபூமி மற்றும் சென்னையின் மேக்ஸ்டர் நிறுவனங்கள் இதனை நடைமுறைப்படுத்தின.

தற்போது கேரளாவின் தனியார் பள்ளிகளிலும் இதனை அமல்படுத்தியிருப்பது, அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்