Skip to main content

எங்களுக்காக எந்த தியாகமும் செய்ய வேண்டாம்.. காங்கிரஸ் கட்சியை விளாசும் மாயாவதி...

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவெடுத்தது.

 

congress

 

ஆனால் அதன்பின் இந்த கூட்டணி முறியவே, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இணையாமல் சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர அஜித் சங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிக்கு 3 இடங்களை அளித்துள்ளன.

சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. அதனை தொடர்ந்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் போட்டியிடும் 7 இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது என காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ட்விட்டரில், "காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியும் இல்லை. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளலாம். எங்களுக்காக வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்கத் தேவையில்லை. மாநிலத்தில் பாஜகவை வெல்வதற்கு சமாஜ்வாதி, நாங்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை இணைந்தாலே போதுமானது. அதனால், காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியும் உ.பி.யிலும், நாடுமுழுவதும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். காங்கிரஸ் கட்சி பரப்பும் பொய்யான செய்தியை கேட்டு கட்சியினர் தவறாகச் சென்றுவிடக்கூடாது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்