கேரளாவில் நடந்த செங்கணூா் சட்டமன்ற இடைத்தோ்தலில் மா.கம்யூ. வேட்பாளா் சஜி சொியன் வெற்றிபெற்றாா்.
காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட செங்கணுா் சட்டமன்ற தொகுதி 25 ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் இருந்தது. இந்த நிலையில் கடந்த தோ்தலின் போது மா.கம்யூனிஸ்ட் காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதியை கைப்பற்றியது. மா.கம்யூ. வேட்பாளா் ராமசந்திரன் நாயா் 52880 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றாா். அப்போது அந்த தொகுதியில் பொிதும் எதிா்பாா்த்த பா.ஜ.க வேட்பாளா் ஸ்ரீதரன் பிள்ளை 42682 ஆயிரம் வாக்குகள் வாங்கி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இது காங்கிரசுக்கு பலத்த அடியாக மாறியதோடு காங்கிரஸ் வேட்பாளா் விஷ்ணுநாத் 44897 வாக்குகள் பெற்றாா்.
இந்தநிலையில் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற மா.கம்யூ. எம்.எல்.ஏ. ராமசந்திரன் நாயா் மரணமடைந்ததையடுத்து கடந்த மாதம் 28-ம் தேதி இடைத்தோ்தல் நடந்தது. இதில் மா.கம்யூ. சாா்பில் சஜி சொியன் போட்டியிட்டாா். பா.ஜ.க சாா்பில் மீண்டும் ஸ்ரீதரன் பிள்ளை போட்டியிட்டாா். காங்கிரஸ் சாா்பில் வேட்பாளா் மாற்றப்பட்டு விஜயகுமாரன் நிறுத்தப்பட்டாா்.
இன்று காலை நடந்த வாக்கு எண்ணிக்கையில் மா.கம்யூ. வேட்பாளா் சஜி சொியன் 67303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். காங்கிரஸ் 46347 வாக்குகளும் பா.ஜ.க 35270 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது.
இதில் கடந்த தோ்தலை விட பாஜக 7500 வாக்குகளும் காங்கிரஸ் 2500 வாக்குகளும் பின்தங்கியது.