Skip to main content

கேரளாவில் 9 வினாடிகளில் தரைமட்டமான 19 மாடி கட்டிடம்...

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக சர்ச்சையில் சிக்கிய மரடு அடுக்குமாடி கட்டிடம் இன்று இடிக்கப்பட்டது.

 

maradu apartment demolished

 

 

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று இதன் பணிகள் இன்று  தொடங்கியுள்ளன.

இன்றும் நாளையும் இந்த கட்டிட இடிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மரடு சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள இந்த 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இதனை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. 19 மாடிகள் கொண்ட முதல் கட்டிடம் வெடிமருந்து மூலம் இடிக்கப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 9 வினாடிகளில் 19 மாடி கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்