கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் வென்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து யாருக்கும் பெறும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேட்சைகள் 5 பேரும், ஜனநாயக ஜனதா கட்சியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.
இதனையடுத்து நேற்று சண்டிகரில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏகள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதல்வர் மனோகர்லால் கட்டார் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டாரும், துணை முதலமைச்சராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்றுக்கொண்டனர்.