Skip to main content

விமானத்தில் பயணிக்க ‘பைலட்’ போல மாறுவேடத்தில் வந்த ராஜன்...

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் லுஃப்தான்சா என்னும் ஜெர்மனியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானி போல உடையணிந்து திருட்டுத்தனமாக விமானத்தில் பயணம் செய்ய திட்டமிருந்த நபர் கைது.
 

pilot

 

 

ராஜன் என்பவர் லுஃப்தான்சா என்னும் விமானத்தில் விமானியாக பணிபுரிவதுபோல ஒரு கள்ள இண்டெண்டி கார்டு தயாரித்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக லுஃப்தான்சா விமானி போன்றே சீறுடை அணிந்து விமான நிலையத்தில் நுழைந்திருக்கிறார்.

உள்ளே சென்ற பின் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ராஜன் மீது சந்தேகம் ஏற்பட, உடனடியாக லுஃப்தான்சாவில் பணிபுரிபவர்களிடம் கால் செய்து ராஜன் என்று எதேனும் விமானி பணிபுரிகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படி யாரும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்றவுடன் டெர்மினல் மூன்றில் ஒரே அமுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் போலி விமானியை பிடித்து கைது செய்துள்ளனர்.

விசாரணையில் நான் கொல்கத்தா செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். விமானத்தில் சிறப்பு சலுகைகளுடன் பயணம் செய்வதற்காக பாங்காக்கில் இதுபோன்று கள்ள அடையாள அட்டையை ரெடி செய்தேன் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக வரை விமான நிலையத்தைவிட்டு வெளியேற்றி இந்திரா காந்தி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 


 

சார்ந்த செய்திகள்