நேற்று காவல்துறை ஆணையரிடம் சாரதா சிட் ஃபண்ட் மோசடி குறித்து விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை அடுத்து, கொல்கத்தாவிலுள்ள காவல் ஆணையர் இல்லத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ‘ஜனநாயகத்தை காப்போம்’ எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். பாஜக இதை விமர்சித்துள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பேசும்போது, ‘ கடமையை செய்ய கொல்கத்தா சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, மாநில காவல்துறையினரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் நடந்த இந்த நிகழ்வு வரலாற்றில் எங்கும் நிகழாதது’ என்றார். இதனிடையே மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவிலிருந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா, இன்று காலை சிறிது நேரம் மட்டும் இடைவேளை எடுத்துகொண்டு பின்னர் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டார். தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தாவை மறைமுகமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்ட காவல் ஆணையர் ராஜீவ் குமார் மம்தாவை சந்தி பேசிவிட்டு சென்றார். என்னதான் தர்ணாவில் மம்தா இருந்தாலும் அலுவலகத்தில் பார்க்க வேண்டிய ஆவண கோப்புகளை, அந்த இடத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.